• No results found

Software Enginner Aagalam Vaanga

N/A
N/A
Protected

Academic year: 2021

Share "Software Enginner Aagalam Vaanga"

Copied!
23
0
0

Loading.... (view fulltext now)

Full text

(1)

  Page 1 of 23 

01010101010101010101010101010

10101010101010101010101010101

01010101010101010101010101010

10101010101010101010101010101

01010101010101010101010101010

10101010101010101010101010101

01010101010101010101010101010

01010101010101010101010101010

10101010101010101010101010101

01010101010101010101010101010

10101010101010101010101010101

01010101010101010101010101010

10101010101010101010101010101

01010101010101010101010101010

01010101010101010101010101010

     

சாப்ட்ேவர் இஞ்ஜினியர் ஆகலாம்

வாங்க!!!

 

 

www.vettipayal.com 

      Balaji     

(2)

சாப்ட்ேவர் இஞ்சினியர்

-

மாணவர்களுக்கு

...

”ஏன்டா ஐடி எடுத்த?” ”ெமக்கானிக்கல் கிைடக்கலண்ேண. அதான். ” “ேவற எந்த டிப்பார்ட்ெமண்டும் கிைடக்கலயா?” ”இல்ைலண்ேண. அதான் ேவற வழியில்லாம ஐடி எடுத்ேதாம்.” ”இந்த அண்ேண, ஆட்டுக்குட்டிெயல்லாம் ெசகண்ட் இயர் பசங்ககிட்ட ெசால்லிடாதீங்கடா. பிரிச்சி ேமஞ்சிடுவானுங்க. புரியுதா?” “புரியுது சார்” என்ன யாருக்கும் புரியைலயா? இது நான் மூன்றாமாண்டு ெபாறியியல் படிக்கும் ேபாது ெமஸ்ல முதல் வருட மாணவனிடம் நிகழ்ந்த உைரயாடல். எங்க ெசட்ல முதல்ல ஐடியும், கம்ப்யூட்டர் சயின்ஸும் ஒேர சமயத்துல ஃபில் ஆச்சு. எங்களுக்கு அடுத்த வருஷம், முதல்ல ஐடி, அடுத்து கம்ப்யூட்டர் சயன்ஸ். அதுக்கு அடுத்த வருஷம் முதல்ல ECE. இெதல்லாம் புரியணும்னா நான் எந்த வருஷம், ஐடி எடுத்ேதனு உங்களுக்கு புரியணும். நான் ேசர்ந்தது 99ல. 2000த்துலயும் கவுன்சிலிங் நடக்கும் ேபாது ஐடி தான் டாப். அதுக்கு அடுத்த வருஷம் ெசம்ம அடி. நாங்க படிச்சி முடிச்சிட்டு வரும் ேபாது ேவைலயில்ைல. எங்க காேலஜ்ல எல்லாம் ேகம்பஸ் இண்டர்வியூேவ இல்ைல. எங்க சீனியர் ெசட்ல அைத விட ேமாசம். ெசலக்ட் ஆன ஒரு சிலருக்கும்

(3)

ஆஃபர் ெலட்டர் வரைல. நாங்க ெவளிய வரும் ேபாது எங்க சீனியர்ேஸ ேவைல ேதடிட்டு இருந்தாங்க. 2003 கைடசில நிைலைம மாற ஆரம்பிச்சுது. ேபான வருஷம் (2007) வைரக்கும் நல்லா இருந்தது. இப்ப மறுபடியும் ஃபீல்ட் டவுன். அடுத்த வருஷம் கவுன்சிலிங் முடிஞ்சி வரும் ேபாது இேத டயலாக்ைக ெமஸ்ல 2007ல ஐடி எடுத்தவங்க ேகட்கலாம். என்ன பண்ண... உலகம் உருண்ைட ;) சரி, இந்த வருஷம் முடிச்சிட்டு வரவங்க நிைலைம ெகாஞ்சம் ேமாசமாத்தான் இருக்கும். அதுக்காக பயந்துட்டு இருக்க ேவண்டாம். எப்படியும் நிைலைம ஒரு வருஷத்துல சரி ஆகும். மிஞ்சி ேபான அதுக்கு அடுத்து ஒரு ஆறு மாசம் ஆனாலும் ஆகலாம். அது வைர என்ன ெசய்யலாம்னு ெசால்ல தான் இந்த பதிவு. இது முழுக்க முழுக்க என் அனுபவத்ைத ெவச்சி ெசால்றது தான். ஃபில்ட் சரியாகும் ேபாது 2009ல முடிச்சவங்க மட்டுமிருக்கலாம், இல்ைல 2010ல முடிச்சிட்டு வரவங்களும் ேசர்ந்து இருக்கலாம். அதனால 2009ல முடிச்சவுங்க முதல்ல வர ஓப்பனிங்ைஸ பயன்படுத்தி உள்ேள நுைழயற அளவுக்கு உங்கைள தயார்படுத்தி ெகாள்ளவும். இப்ப ஜனவரி முடியப்ேபாகுது. உங்க பிராஜக்ைட முடிவு பண்ணிருப்பீங்க. பாதி ேபர் காசு ெகாடுத்து வாங்குற ஐடியால இருக்கலாம். முடிந்த வைர ெசாந்தமா ெசய்ய பாருங்க. அது தான் என் சீரியஸ் அட்ைவஸ். அப்படி ெசய்யாம ேபாகும் ேபாது, வாங்கற ப்ராஜக்ைட புரிஞ்சிக்ேகாங்க. அைத அக்குேவற ஆணிேவறயா பிரிச்சி, புரிஞ்சிக்க முயற்சி ெசய்யவும். அதுல ஏதாவது மாற்றம் ெசய்ய முயற்சி ெசய்யவும். அதனால கைடசி நாள்ல காசு ெகாடுத்து வாங்கற ேவைலைய ெசய்யாதீங்க. முடிஞ்ச வைரக்கும் சீக்கிரம் வாங்க பாருங்க. மறுபடியும் என்னுைடய சஜஷன் ெசாந்தமா ெசய்யறது தான். அடுத்து, முடிஞ்ச வைரக்கும் ேபப்பர் ப்ரசண்ேடஷெனல்லாம் முயற்சி ெசய்யவும். நீங்க மூன்றாமாண்டு படிக்கும் மாணவராக இருந்தால் இைத நிச்சயம் முயற்சி ெசய்யவும். இதனால ேவைல கிைடக்குமா, ெரஸ்யுேமக்கு ேவல்யூ அதிகமாகுமானு எல்லாம் என்னால ெசால்ல முடியாது. ஆனா உங்க தன்னம்பிக்ைக

(4)

கூடும். அது தான் முக்கியம். நிைனச்சைத தைடயில்லாமல் நாலு ேபர் முன்னாடி ஆங்கிலத்துல ேபச வாய்ப்பிருக்கும்.

வகுப்புல க்ருப் டிஸ்கஷன் எல்லாம் முயற்சி ெசய்யலாம். இல்ைலனா

இரண்டாமாண்டு படிச்ச Data Structures, DBMS, OOPS.... இந்த மாதிரி ஏதாவது ஒரு சப்ஜக்ைட க்ளாஸ் முழுக்க பிரிச்சி மறுபடியும் நீங்கேள உங்களுக்குள்ள

நடத்திக்கலாம். இது உங்களுக்கு ஒரு முைற Refresh பண்ணிக்க உதவும். அதுவுமில்லாமல் உங்க நண்பர்கள் முன்னாடி ேபசி பழகறது உங்க

கூச்சப்பழக்கத்ைத குைறக்கும்.

காேலஜ் ைலஃப்ல நிைறய படிக்க முடியும். முடிஞ்ச வைரக்கும் Quantitative Aptitude (RS Agarwal), Shakunthala Devi (Puzzles to Puzzle you, More Puzzles) எல்லாம் காேலஜ்லேய முடிச்சிடுங்க.இந்த லிங்க்லஇருக்கறைதபடிச்சா உங்களுக்கு இன்னும்பயன்படும்னு நிைனக்கிேறன். நிைறய விஷயங்கைள பகிர்ந்து ெகாள்ள காேலஜ் சரியான இடம். ெவளிய வந்தா ஒரு ேகள்வி புரியைலனா ெசால்லி தர ஆள் இருக்காது. அதுக்கு ட்ெரயினிங்னு ெசால்லி ெகாள்ைள அடிப்பாங்க. அதனால படிக்கிற காலத்துல அைத நல்லா படிச்சிட்டா பின்னாடி சுலபமா இருக்கும். ெவளிய வந்ததும், ேவைல கிைடக்கிற வைரக்கும் சும்மா வ ீட்ல இருக்கலாம்னு நிைனக்காதீங்க. ெசன்ைனேயா, ெபங்களூேரா வந்து ெகாஞ்சம் கஷ்டப்படுங்க. அப்ப தான் ேவைல ேதடற ெவறி வரும். குண்டு சட்டில குதிைர ஓட்ற ேவைலெயல்லாம் ஆகாது. முடிஞ்ச வைர Communication skillsஐ வளர்த்துக்ேகாங்க. உங்கேளாட ெடக்னிக்கல் ஸ்கில்ைஸ விட இது தான் அதிகமா ேவைல ெசய்ய ேபாகுது. அதனால அதுல கவனத்ைத ெசலுத்தவும். ெதரியாதைத தயக்கமில்லாமல் நல்லா படிக்கிற (ெசால்லித்தற) பசங்ககிட்ட ேகட்டு ெதரிஞ்சிக்ேகாங்க. அேத மாதிரி ெதரியாதவங்களுக்கு ெசால்லி ெகாடுங்க. உலகம் ெராம்ப ெபருசு, நீங்க ெசால்லி தருவதால் உங்ககிட்ட ேகட்டவன் உங்க ேவைலைய தட்டிட்டு ேபாயிடுவானு ெபாறாைமல ெசால்லி தராம விட்டுடாதீங்க. காேலஜ் வந்து அந்த அளவுக்கு சின்ன புள்ைள தனமா இருக்க மாட்டீங்கனு ெதரியும். இருந்தாலும் ஒரு தடைவ ெசால்லிடேறன்.

(5)

ஃபீல்ட் டவுன்னு ெசால்லி ேசாகமா உட்கார்ந்துடாதீங்க. ேவைல வாய்ப்பு வரும் ேபாது தயார் ெசய்ய ஆரம்பிச்சா நிச்சயம் அந்த வாய்ப்ைப ேவற யாராவது தட்டிட்டு ேபாயிடுவாங்க. அதனால எப்பவும் தயாரா இருக்கவும்... All the very best my dear juniors...      

சாப்ட்ேவர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-1!!!

இந்த ெதாடர் மூலம் சாப்ட்ேவட் இண்ட்ஸ்ட்ரில ேவைல ேதடுவது எப்படினு எனக்கு ெதரிஞ்ச அளவுக்கு எழுதலாம்னு இருக்கிேறன். ஆங்கிலம் அதிகமா பயன்படுத்துேவன். தமிழ் கூறும் நல்லுலகம் என்ைன மன்னிக்குமாக. சாப்ட்ேவர் இண்டஸ்ட்ரில ேவைல வாங்குவதற்கு கடின உைழப்ைபவிட

புத்திசாலித்தனமான அணுகுமுைறேய ேபாதும். (We need to do Smart Work, no need for Hard work). புத்திசாலித்தனமான அணுகுமுைறக்கு புத்திசாலியா

இருக்கனும்னு அவசியமில்ைல :-). சில தவறான புரிதல்கள்: (இெதல்லாம் நாங்க படிக்கும் ேபாது நிைனத்துக் ெகாண்டிருந்தது) 1) இண்டஸ்ட்ரில புதுசா வர ெடக்னாலஜி எல்லாம் ெதரிஞ்சாதான் ேவைல கிைடக்கும். 2) ஜாவா ெதரிஞ்சா தான் ேவைல வாங்கலாம்.

3) Resume அதிக பக்கம் இருக்கணும். Area of Interest நிைறய இருக்கணும். 4) Quants, analytical, Verbal எல்லாம் GRE, GMAT, CAT படிப்பவர்களுக்கு தான். 5) Shakuntala Devi Puzzles படிச்சா ேபாதும் இன்ேபாஸிஸ்ல ேவைலக்கு ேசர்ந்துடலாம். 6) முக்கியமான ஒன்று: ெபங்களூர் ேபான சுலபமா ேவைல வாங்கிடலாம். ெசன்ைனல openings கம்மி. 7) அதிக மதிப்ெபண் ெபற்றவர்களுக்குதான் ேவைல சுலபமா கிைடக்கும். 8) தினமும் எல்லா companyக்கும் ேபாய் Resume ெகாடுக்க ேவண்டும். (இன்னும் நிைறய இருந்தது. எல்லாம் மறந்து ேபாச்சு. ஞாபகம் இருப்பவர்கள் ெசான்னா நல்லா இருக்கும்) இது எல்லாம் முட்டாள்தனம்னு ேவைல ேதடும்ேபாது தான் ெதரிந்தது.

(6)

நான் BE முடித்தது 2003ல். அந்த வருடம் ேகாைவல PSG, CIT, GCT தவிற மத்த காேலஜ்ல எல்லாம் Campus Placement ெராம்ப கம்மி. ெசால்லப் ேபானால் எங்க காேலஜ்ல எல்லாம் Placementஏ இல்ைல. சரி ேவைல ேதடி எங்கு ேபாகலாம்னு ேயாசிக்கும் ேபாது ெசன்ைன அல்லது ெபங்களூர்னு முடிவு பண்ேணாம். ெபங்களூர்ல தான் சாப்ட்ேவட் இண்ட்ஸ்ட்ரிஸ் அதிகம் இருக்கு, அதானால அங்கேய ேபாகலாம்னு முடிவு ெசய்து அங்ேக ெசன்ேறாம். அந்த நாள்ல Openings கம்மியா இருந்ததால ஒரு சிலர் எல்லாம் ேவைல ேதடாம ெசாந்த ஊரிேல விவசாயம் மற்றும் ெசாந்த பிஸினஸ் பார்க்க ெசன்று விட்டனர். ெமாதல்ல ேபான எங்களுக்கு ேவைல கிைடக்க 6-10 மாசமானது. அதற்கு பிறகு எல்லா companyயும் ேபாட்டிப் ேபாட்டுக் ெகாண்டு ஆள் எடுக்க ஆரம்பித்தன. ஊருக்கு ேபானவர்கள் எல்லாம் விஷயம் ெதரிந்து ெபங்களூர் வந்தனர். எங்க ரூம் ேவடந்தாங்கல் மாதிரி, ேவைலத் ேதடி வருபவர்களுக்கு ேவைல கிைடத்தவுடன் அடுத்த batch வரும் (ெபாதுவாக ேவைல கிைடப்பவர்கள்

hyderabad, Noida, Chennai, ைமசூர் ெசன்று விடுவார்கள்) . எப்ெபாதும் ேவைல ேதடி வருபவர்கள் ஒரு 3-5 ேபர் இருப்பார்கள். நான் ெபங்களூர்ல இருந்த வைரயில் 20-30 ேபருக்கு ேமல் எங்க ரூம்ல தங்கி ேவைல ேதடி நல்ல பணியில் ேசர்ந்திருக்கிறார்கள். இந்த அனுபவத்ைத ைவத்து தான் இந்த ெதாடைர எழுதுகிேறன். இதுல எனக்கு ெதரிந்த வைரயில் practicalலாக எழுதுகிேறன்.                  

(7)

   

சாப்ட்ேவர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-2

இப்ப நான் ெசால்ல ேபாறது, காேலஜ் முடித்து ேவைல ேதடுபவர்களுக்கு. (நான் ெசால்வது எல்லாம் average மற்றும் Below average மாணவர்களுக்கு. புத்திசாலி மாணவர்களுக்கு ெசால்லி தரும் அளவுக்கு என்னிடம் சரக்கு இல்ைல) நீங்க எந்த இஞ்ஜினியரிங் (even MCA/ MSc) ேவண்டுெமன்றாலும் படித்திருக்கலாம். கம்ப்யூட்டர் இஞ்ஜினியர்களுக்கு மட்டும் தான் Software field என்று நிைனக்காதீர்கள். எனக்கு ேமனாஜராக இருந்தவர்கள் ெமக்கானிக்கல் மற்றும் சிவில் படித்தவர்கேள. கம்ப்யூட்டர் படித்தவர்களுக்கு ெகாஞ்சம் ஈஸியாக இருக்கலாம். ஆனால் யார் ேவண்டுெமன்றாலும் கம்ப்யூட்டர் கற்றுக்ெகாள்ளலாம். அதற்கு ேதைவயான ஒன்று ஈடுபாடு மட்டுேம. நீங்க Fresherஆக ேவைல ேதடுபவர்கள் என்றால் உங்களிடம் இந்த புத்தகங்கள் இருப்பது அவசியம்.

1) Quantitative Aptitude by R.S. Aggarwal

2) Dictionary (even u can have the E-copy, its OK) 3) Let Us C 4) Pointers in C இைத எப்படி படிப்பது என்பது பின்னால் ெசால்கிேறன். இப்ப எங்க கைதய ெசால்ேறன். நம்ம பசங்களுக்கு எல்லாம் (என்ைனயும் ேசர்த்து) இங்கிலிபிஸ் அவ்வளவு நல்லா ேபச வராது. காரணம் காேலஜ்ல நாமாலும் இங்கிலிபிஸ்ல ேபச மாட்ேடாம். ேபசறவைனயும் விட மாட்ேடாம். ஏன்னா காேலஜ்ல படிக்கும் நம்மைளப் ெபாருத்தவைர இங்கிலீஸில் ேபசவது ஒரு பாவச்ெசயல். இங்கிலீஸில் ேபசவது ஒரு ெபருங்குற்றம். இங்கிலீஸில் ேபசவது ஒரு மனிதத்தன்ைமயற்ற ெசயல். கடைல ேபாடுபவர்கள் மட்டும் தான் இங்கிலீஸில் ேபசுவார்கள். நம்மல மாதிரி ஆளுங்க எல்லாம் காேலஜ்க்கு வந்தாேல ெபரிய விஷயம். அதுல ேபாயி இங்கிலீஸ்ல ேபசிட்டாலும் (இதுக்ெகல்லாம் பின்னாடி அனுபவித்ேதாம்).

(8)

ஆனால் எங்கைள மாதிரி கூட்டம் தான் எல்லா காேலஜ்லயும் அதிகம்.

Cosmopoliton cityல படித்த நாங்கேள இப்படினா (சும்மா build-up :-)), மத்த ஊர்ல படித்தவர்களின் நிைலைம இன்னும் ேமாசம்.

எதுவுேம ெதரியலனாலும் Software Industryக்கு நல்லா இங்கிலீஸ் ேபச ெதரிஞ்சா ெபாதும். ேவைலயும் வாங்கிடலாம், வாழ்க்ைகயும் ஓட்டிடலாம். ஆனால் நமக்கு அங்க தான் தகராறு. Linked List Programகூட 15 நிமிஷத்துல ேபாட்டுடுவன். ஆனால் 15 நிமிஷம் ெதாடர்ந்து இங்கிலீஸ் ேபசனும்னா??? ஆண்டவா ஏன் இப்படி ேசாதிக்கிறனு ேதாணும்!!! ஆனால் நாங்களும் இங்கிலிஸ்ல ேபசி ேவைல வாங்கேனாம். அதுக்கு நாங்க நிைறயா கஷ்டப்பட்ேடாம். நாங்க என்ன ெசய்ேதாம்...                                  

(9)

   

சாப்ட்ேவர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-3!!!

நாங்க ெபங்களூர் வந்தவுடன் புரிந்து ெகாண்ட விஷயம் நம்ைமத்தவிர (தமிழர்கைள) எல்லாரும் நல்லா இங்கிலீஸ் ேபசுறானுங்க (ஆந்திராக்காரர்கள் நம்ைமவிட ேமாசம்). நம்ம ஊர் ெபாண்ணுங்களும் பட்ைடையக் கிளப்புறாங்க. (இதுக்கு தான் கடைல ேபாடும் ேபாது இங்கிலீஸ்ல ேபசறாங்கனு புரிஞ்சிது). எங்க கூட வந்த ஒருத்தனுக்கு இங்கிலீஸ்ல ேபசனா ேவைல கிைடத்துவிடும்னு நம்பிக்ைக. நம்ம முதல் ரவுண்ட் கிளியர் பண்ணாதான இண்டர்வியூ. அதுக்கு முதல்ல தயார் பண்ணுேவாம்னு நான் ெசான்னன். அவன் என் ேபச்ைசக் ேகக்காம "Call Center Training"ல 5000 குடுத்து ேசர்ந்தான்.

முதல் வாரம் அவர்கள் எடுத்தது Basic Grammer (Tense, Verb, Noun, Adjective...). நம்ம எல்லாம் அைத எட்டாவதுல படித்து இருப்ேபாம். இரண்டாவது வாரம் ஒரு தைலப்ைப ெகாடுத்து 10 நிமிடம் ேபச ெசான்னார்கள். மூன்றாவது வாரம் GD.கைடசி வாரம் திடீெரன்று தைலப்ைப ெகாடுத்து ேபச ெசால்வார்கள்.இந்த Trainingக்கு எதற்கு 5000? இைத நாங்கேள ரூம்ல ெசய்யலாம்னு ேயாசிச்சி பண்ண ஆரம்பித்ேதாம். முடிந்தவைர ஒருவருக்ெகாருவர் இங்கிலீஸ்லேய ேபசிக் ெகாண்ேடாம் (இது பயங்கர ேஜாக்காக இருக்கும்). தினமும் ஒருவர் மற்றவர்களுக்கு தைலப்ைப குடுத்து ேபச ஆரம்பித்ேதாம்.முதலில் மிகவும் சுலபமான தைலப்ைப குடுத்துக் ெகாண்ேடாம். பிறகு ஒருவனுக்கு நான் சுலபமான தைலப்பு என்று குடுத்தது அவனுக்கு கடினமாக ேதான்ற பதிலுக்கு அவன் அடுத்தவனுக்கு கடினமான தைலப்ைப குடுக்க... நல்லா சூடு பிடிக்க ஆரம்பித்தது. கண்ணாடிையப் பார்த்து ேபசிப்பழகுவது என் நண்பன் ஒருவன் ெசான்ன அறிவுைர. அது எங்கள் அைனவருக்கும் பயன்பட்டது. 2 மாசத்துல எங்களுக்ேக நம்பிக்ைக வர ஆரம்பித்தது. நான் சந்தித்த நபர்களில் ெபரும்பாலும் எங்கைள ேபாலேவ ஆங்கிலம் ேபச தயங்குபவர்கள் அதிகம். அவர்களுக்கு நான் ெசான்னெதல்லாம் இதுதான். ஆங்கிலம் என்பது நம் தாய் ெமாழியல்ல. அது நம் அறிவின் அளவுேகாலும் அல்ல. அதில் நாம் பண்டிதர்களாக ேவண்டிய ேதைவயுமில்ைல. ஓரளவிற்கு திக்காமல்

(10)

திணராமல் நாம் ெசால்ல நிைனத்தைத ெசான்னாேல ேபாதும்.

தினமும் "The Hindu" editorial page சத்தம்ேபாட்டு படிக்கவும். தினமும் குைறந்தது 1-2 மணி ேநரம் ஆங்கில ெசய்தித்தாள் படிக்கவும், GD அல்லது தைலப்ைபக் ெகாடுத்துப் ேபச பயன்படுத்திக் ெகாள்ளலாம். ெதரியாத வார்த்ைதகைள எழுதி ைவத்துக்ெகாண்டு அைத எப்படியும் தினமும் பயன்படுத்தவும்.

ேபசுவதற்கு ஆள் இல்ைல என்றால் Airtel/Hutch customer careக்கு ேபான் ெசய்து ேபசவும். என் பக்கத்து ரூம்ல இருப்பவன் இைத தான் ெசய்வான். அவனுைடய ேகள்விகள் எதுலயும் logic இருக்காது. இருந்தாலும் அவன் தயங்காமல் முப்பது நிமிடம் ேபசுவான். (eg. Is Airtel better than Hutch, Y there is no signal in Electronic City?, which is the better plan in Airtel....)

யார் கிண்டல் ெசய்தாலும் வருத்தப்படாதீர்கள். கிண்டல் ெசய்ற எந்த நாயும் சுண்டல் கூட வாங்கி தரமாட்டானுங்கனு மனதிற்குள் ெசால்லிக்ெகாள்ளவும் :-). தயவு ெசய்து பணத்ைத "Call Center training"க்கு குடுத்து வ ீணாக்காதீர்கள். எந்த ெமாழிையயும் நமக்குள் யாரும் திணிக்க முடியாது, பழக பழக தானாக வந்துவிடும்...                        

(11)

   

சாப்ட்ேவர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-4!!!

ெமன்ெபாருள் துைறயில் புதிதாக ேவைலயில் ேசர்பவர்களுக்கான ேதர்வு முைற எப்படி இருக்கும்???? ெபாதுவாக இப்படிதான் எல்லா கம்ெபனியும் ேவைலக்கு ஆள் எடுப்பார்கள் என்று ெசால்ல முடியாது. ஒவ்ெவாரு கம்ெபனியும் ஒவ்ெவாரு முைறைய ைகயாள்கிறார்கள். ஆனால் ெபரும்பாலான கம்ெபனி ைகயாளும் முைற என்னெவன்றால், முதல் சுற்று: Aptitude Test. இரண்டாவது சுற்று: Technical Interview மூன்றாவது சுற்று: HR Interview

இதில் ஒரு சில கம்ெபனிகளில் Technical Interviewவும், HR Interviewவும் ேசர்ந்ேத இருக்கும். சரி இனி ஒவ்ெவாரு சுற்றுக்கும் தயார் ெசய்வது எப்படி, முக்கியமாக ெரசுேம தயார் ெசய்வது எப்படி என்று பார்ப்ேபாம். ேவைல ேதட முக்கியாமன ஒன்று ெரசுேம (Resume). நாங்க ேவைல ேதடும் ேபாது ெசய்த ெபரிய தவறு, நம்ைம முதலில் தயார் ெசய்து ெகாண்டு ெரசுேம தயார் ெசய்யலாம் என்று ேயாசித்துக் ெகாண்டுருந்தது. ஆயுள் முழுக்க படித்தாலும் எந்த ஒரு ெடக்னாலஜியுலும் அைனத்ைதயும் ெதரிந்து ெகாள்ள முடியாது என்று உணர்ந்ேதாம். ஆகேவ ேவைல ேதடும் ேபாது முதலில் ேதைவப்படுவது ெரசுேம தான். ெரசுேம எப்படி இருக்க ேவண்டும் என்று எனக்கு ெதரிந்தவைர ெசால்கிேறன். 1) முக்கியமாக 2-3 பக்கங்களுக்குள் இருப்பது நல்லது. 2) SSLC, +2, டிகிரி மதிப்ெபண்கள் இருக்க ேவண்டும். 3) எனக்கு நிைறய ெதரியும் என்று காட்டிக்ெகாள்ள நிைனத்து ெதரியாதைத எல்லாம் ேபாடாதீர்கள். டிகிரியில் படித்த அைனத்ைதயும் Area Of Interestல் ேபாடாதீர்கள். நன்றாக ெதரிந்தைதேய முடிந்த அளவு ேபாடுங்கள். இல்ைலெயன்றால் ெரசுேமவில் இருப்பைத ெதரிந்து ெகாள்ளுங்கள்.

(12)

நான் பார்த்த ெரசுேம ஒன்றில் இருந்தது: Known:

Operating System: DOS, Windows 9x/ME/XP, Linux, Unix Languages: C, C++, Java, COBOL...

Packages: VB, .NET...

DataBase: Oracle 8, MS Access, DB2, Sybase

Area Of Interest**: Data Structure, Object Oriented Concepts, DBMS, Computer Networks, Compiler Design, Microprocessor...

உண்ைமயில் அவனுக்கு (எனக்கும்) இதில் எதுவுேம ஒழுங்காக ெதரியாது. இதில் இருக்கும் அைனத்ைதயும் தினமும் படிக்க ேவண்டும் என்று நிைனத்து எைதயும் படிக்கமாட்டான். 4) அதிக பில்ட் அப் ெகாடுக்காதீர்கள். (Achievements: உண்ைமயாக ஏதாவது இருந்தால் ேபாடுங்கள் இல்ைல என்றால் விட்டுவிடுவது நல்லது. College Symposium எல்லாம் ேபாடுவது ேதைவயில்ைல என நிைனக்கிேறன்) 5) ெரசுேமவில் பிறந்த நாள் இருப்பது நல்லது. (ஏெனன்றால் இன்ேபாஸிஸ் ேபான்ற கம்ெபனிகள் பார்ப்பது ெபயர், பிறந்த நாள், மதிப்ெபண்கள் தான். Name, DOB, Marks are the primary keys) . பாஸ்ேபார்ட் விவரங்கள் எல்லாம் ேதைவ இல்ைல.

**Area Of Interest:

நான் படிக்கும் ேபாது ெராம்ப ேயாசிச்சி எல்லாம் படிச்சதில்ைல. எனக்கு ேவைல கிைடத்தால் ேபாதும் என்று நிைனப்பவர்கள், Object Oriented Conceptsஐ

ேதர்ந்ெதடுத்துக் ெகாள்ளலாம். இதில் Freshers க்கு ேகட்கும் ேகள்விகள் ஒரளவிற்கு சுலபமாகத்தான் இருக்கும்.

(Abstraction, Encapsulation, Inheritance, Diff Bw Structural Approach and OOPs...). முடிந்த அளவு AOI 1 அல்லது 2க்கு ேமல் ேபாட ேவண்டாம் என்பது என் எண்ணம். படிக்கும் ேபாேத நான் நன்றாக புரிந்து படித்ேதன். எனக்ெகன்று ஒரு லட்சியம் இருக்கிறது. நான் ஜாவா ெடவலப்பராகேவா/ெநட் ஒர்க் அனலிஸ்டாகேவா/ ேடடாேபஸ் அட்மினிஸ்ட்ேரட்டராகேவா தான் ஆேவன் என்பவர்கள் அதற்கான முயற்சிைய மட்டும் ேமற்ெகாள்ளுங்கள். ெகாஞ்சம் ேலட் ஆனாலும் நீங்கள் விரும்பிய பணிைய ெசய்யலாம். Aptitude Testக்கு தயார் ெசய்வது எப்படி என்று அடுத்த பதிவில் பார்க்கலாம். ெதாடரும்... PS:

(13)

ைவக் அவர்களின் பின்னூட்டம்:

AOI, final year project சம்மந்தப்பட்டதா இருந்தால் நல்லது, அைத பத்தி ேகள்வி ேகட்டு interview ஓட்டிடலாம் (அதாவது ெசாந்தமா ெசஞ்ச project'ஆ இருந்தால் :)) அதாவது அவங்க ேகள்வி ேகக்கறதுக்கு முன்னாடி, எனக்கு இது ெதரியுங்கற மாதிரி பில்ட் அப் குடுத்தா , உனக்கு என்ன ெதரியும்னு அவங்களுக்கு ேசாதிக்க ேதானும் அதனால ேவற எதுேலயும் ேகள்வி ேகட்க மாட்டாங்க.                                        

(14)

   

சாப்ட்ேவர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-5!!!

சரி, ெரசுேம தயார் ெசய்வது எப்படினு பாத்தாச்சி. முதல் சுற்றான Aptitude Testக்கு தயார் ெசய்வது எப்படினு பார்ப்ேபாம். Aptitude Testல என்ன மாதிரி ேகள்விகள் எல்லாம் ேகட்கலாம்??? 1) Numerical Problems (எண்கணிதம்) 2) Logical/Analytical Puzzles 3) Verbal skills 4) C Programming Fundamentals இனி ஒவ்ெவான்றுக்கும் தயார் ெசய்வது எப்படினு பார்ப்ேபாம்: 1) எண்கணிதம்:

இதற்கு எனக்கு ெதரிந்த ஒேர ெதய்வம் "Qunatitative Aptitude" by R.S. Aggarwal இதில் முதல் 4-5 chapters ெவட்டி மாதிரி ெதரியும். ஆனால் அதுதான் முக்கியமான ஒன்று. எல்லா கணக்ைகயும் ேபாட்டு பாருங்கள். பார்த்தா ெதரிஞ்ச மாதிரி இருக்கு அதனால ேபாட்டு பார்க்க ேதைவயில்ைலனு விட்டுவிடாதீர்கள். கணக்ைக ெபாருத்தவைர திரும்ப திரும்ப ேபாட்டு பார்த்தால்தான் வரும். எனக்கு ெதரிந்த வைர முக்கியமான chapters: 1) Problems on Numbers. 2) Problems on Ages 3) Time and Work 4) Pipes and Cisterns 5) Percentages 6) Profit and Loss

7) Series or Find the Odd ones 8) Venn Diagram (Satyam, CTS...)

Probability & Permutation and Combination அந்த புத்தகத்தில் இருக்காது. அதனால் இைத CAT/GRE படிப்பவர்களிடமிருந்து நகல் எடுத்துக் ெகாள்ளுங்கள்.

HCL Cisco முதல் சுற்றில் 20ல் 14 ேகள்விகள் Probability & Permutation and Combinationல் இருந்து வந்தன. அந்த ேதர்வில் நான் ேதர்ச்சி ெபற அதுேவ உதவியது. ஏெனன்றால் அைனவரும் R.S. Aggarwal படித்திருந்தனர்.

(15)

(இண்ெடர்வியுல ஊத்திக்கிச்சு :-)) 2) Logical/Analytical Puzzles:

இதற்கு நான் பயன்படுத்தியது IMS GRE Material. நான் GRE படிக்கவில்ைல. ஆனால் நண்பனிடமிருந்து வாங்கி பயன்படுத்திக் ெகாண்ேடன். இதற்கு எல்லாம் ெபரிய புத்திசாலிதனம் ேதைவயில்ைல. எல்லாேம 8-10 மாணவர்கள்கூட ேபாட்டுவிடுவார்கள். ஒவ்ெவாரு மாதிரியான puzzlesம் எப்படி அணுக ேவண்டுெமன்று அந்த புத்தகத்தில் இருக்கும். மகிழ்ச்சியாக படியுங்கள் சுலபமாக கற்றுக் ெகாள்ளலாம். படித்தைத ெதரியாதவருக்கு ெசால்லிக் ெகாடுங்கள். 3) Verbal skills : இைத பற்றி ஒரு பதிேவ ேபாட்டாச்சு. 4) C Programming Fundamentals:

"Let us C", "Pointers in C", "Test ur C Skills"- Yashwant Kanitkar.

இதற்கு ேமல் எதுவும் ேதைவயில்ைல. முதலில் "Let Us C"ல் ஆரம்பிக்கவும். பிறகு "Pointers in C". "Test ur C Skills"ல் ேகள்வி பதில்கள் இருக்கும். ேதர்வுக்கு முன்னால் கண்டிப்பாக ஒரு முைறயாவது படிக்கவும்.

அடப்பாவி நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு இத்தைன புத்தகத்ைத ெசால்லிட்ட. படிக்கற கஷ்டம் எங்களுக்கு தான ெதரியும்னு ெசால்லறீங்களா?

கஷ்டப்படாம எதுவும் கிைடக்காது கண்ணா...

ஒரு நாள் முழுக்க Quants, அடுத்த நாள் Verbal, அடுத்து Analytical, அடுத்து technicalனு படிக்காதீங்க!!! தினமும் ஒவ்ெவான்றிற்கும் 2-3 மணி ேநரம் ஒதுக்கி படியுங்கள். இது ெபங்களூர், ெசன்ைனனு ேபாய் mansionல தங்கி ேவைல

ேதடுபவர்களுக்கான ேநர ஒதுக்கீடு. மற்றவர்கள் அவரவருக்கு தகுந்த மாதிரி ஒதுக்கி ெகாள்ளவும்.

(16)

சாப்ட்ேவர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-6!!!

முதல் சுற்றுக்கு தயார் ெசய்வது எப்படினு பார்த்தாச்சு. அடுத்த சுற்று "Technical Interview". இந்த சுற்று ெபரும்பாலும் உங்கள் ெரசுேமைவப் ெபாருத்ேத இருக்கும். ெசாந்தமாக பிராஜக்ட் ெசய்திருந்தாேலா அல்லது பிராஜக்ட்ைட பற்றி ஓரளவு ெதரிந்திருந்தாேலா, அைதப் பற்றி அவர்கள் ேகட்கும் முன்னேர ெதரிவிக்கவும். பிறகு அவர்கள் அதிலிருந்ேத ேகட்பார்கள் ஓரளவிற்கு ஒப்ேபற்றிக் ெகாள்ளலாம். முடிந்த அளவு பிராஜக்ட் ெசய்திருக்கும் Languageஐ Area Of Interestல் ேபாடவும். AOIல் இருப்பைத ஓரளவிற்கு நன்றாக ெதரிந்துக் ெகாள்ளுங்கள். AOIல் 2ற்கு ேமல் ேபாடாதீர்கள். ஏெனன்றால் உங்களுக்கு OOPS தான் ெதரியும் ஏன்றால் ேகள்விக் ேகட்பவர் அதில் திறைமயில்லாதவராக இருந்தாலும் அதிேல ேகட்பார். அதில் அவர் திறைமயுள்ளவராக இருந்தாலும் Fresher என்பதால் ஓரளவு சுலபமாகேவ இருக்கும். அதனால் 4-5ஐப் ேபாட்டு அதில் அைறகுைறயாக ெதரிந்து ெகாள்வைதவிட 1-2 ேபாட்டு அதில் அதிகமாக ெதரிந்து ெகாள்வேத சிறந்தது. அகல உழுவைதவிட ஆழ உழுவேத சிறந்தது. முடிந்தவைர Group discussion ெசய்யவும். ெதரியாதவர்களுக்கு ெசால்லிக் ெகாடுக்கவும். ெதரியாதவர்களுக்கு ெசால்லிக் ெகாடுப்பதனாலேய அதிகம் கற்றுக் ெகாள்ள முடியும். படித்ததும் மறக்காது. நண்பர்களிைடேய Mock Interview ெசய்து ெகாள்ளவும். Personal Interviewவிற்கு தயார் ெசய்வது என்று அடுத்து பார்க்கலாம்... ெதாடரும்... பிகு: AOI ேதர்ந்ெதடுப்பது.

(17)

C நன்றாக ெதரியுெமன்றால் Data Structure ேபாட்டுக் ெகாள்ளலாம். Stack, Queue, Linked List, Search, Sort Program எல்லாம் எழுத கற்றுக் ெகாள்ளவும். என் நண்பன் ஒருவனுக்கு Linked List Program எழுதனவுடன் ஒரு MNCல் Offer letter

ெகாடுத்துவிட்டார்கள். புரிந்து படித்தால் Data Structure வாழ்க்ைக முழுக்க மறக்காது.

C++, Java நன்றாக ெதரியுெமன்றால் OOPS ேபாட்டுக் ெகாள்ளலாம்.

Oracle நன்றாக ெதரியுெமன்றால் RDBMS ேபாட்டுக் ெகாள்ளலாம். ெகாஞ்சம் லாஜிக்கலாக ேயாசித்துப் ேபாடவும்.

(18)

சாப்ட்ேவர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-7!!!

Technical Interviewவிற்கு தயார் ெசய்வது எப்படினு முந்ைதய பகுதியில் பார்த்ேதாம். ேநர்முக ேதர்ைவ (Personal Interview) அணுகுவது எப்படினு இந்த பகுதியில் பார்ப்ேபாம். ெசய்யக் கூடாதைவ: -சரியான ேநரத்தில் ெசன்றால் ேபாதும் நிைனக்காதீர்கள். -அடிக்கிற மாதிரி கலர்ல டிரஸ் ேபாடதீர்கள். (நீங்கள் ராமராஜன், விஜயகாந்த், சிம்பு ரசிகரா இருக்கலாம். அதுக்காக உங்க பாசத்த இண்டர்வியூவில் காட்ட ேவண்டாம்) -இண்டர்வியூவின் ேபாது சிவிங் கம் (Chewing Gum) சாப்பிடாதீர்கள். -உங்கள் வறுைம நிைலைமைய ெசால்லி ேவைல ேகட்காதீர்கள். -அதிக பிரசங்கி தனமாக எதுவும் ேபசாதீர்கள். (Dont act over smart) -இந்த ஊரில்தான் ேவைல ெசய்ேவன் என்று அடம்பிடிக்காதீர்கள். ெசய்யேவண்டியைவ:

- 30 நிமிடத்திற்கு முன்னாதக இண்டர்வியூ நடக்கும் இடத்திற்கு ெசன்றுவிடவும். - Formalsல் ெசல்லவும். முழுக்ைக சட்ைட, ேபண்ட், ஷீ அணியவும்.(Even if the company does not have dress code)

- ேதைவயான சர்ட்டிபிேகட் ைகயில் ைவத்திருக்கவும். அதற்கு ஒரு ெசக்-லிஸ்ட் ைவத்திருக்கவும். சர்ட்டிபிேகட்கைள சரியான முைறயில் அடுக்கி ைவக்கவும். ேதைவப்படும் ேபாது எடுக்க வசதியாக இருக்கும்.

-உங்கள் ெபயைர அைழத்தவுடன் உள்ேள ெசல்லவும்.

-உள்ேள ெசன்றவுடன் நட்புடன் சிரித்து வாழ்த்து ெசால்லவும். (Have a Friendly Smile and Say "Hi/Hi, how r u doing?". Let it be casual)

-இண்டர்வியூ எடுப்பவர் ைக ெகாடுத்தால் மட்டும் ைக ெகாடுக்கவும். -ைக ெகாடுக்கும் ேபாது ஓரளவு இறுக்கமாக ைக ெகாடுக்கவும் (Let it be Firm to show ur confident). பயம் ேவண்டாம். -ேகள்வி ேகட்பவரின் கண்ைணப் பார்த்து ெபசவும். 4-5 ேபர் இண்டர்வியூ ேபனலில் இருந்தால், ேகள்வி ேகட்பவைரப் பார்த்து பதில் ெசால்லவும். -தன்னம்பிக்ைகயுடன் பதில் ெசால்லவும். இதுேவ ேவைல வாங்குவதற்கு உதவும். -ெசல் ேபாைன தவிர்க்கவும். எடுத்து ெசன்றாலும் அைணத்துவிடவும் (Switch it Off)

(19)

- முடிந்தவைர உண்ைமைய ேபசவும்.

ெபரும்பாலான கம்ெபனிகளில் முதல் ேகள்வி, உங்கைளப் பற்றி ெசால்லுங்கள் என்பதுதான். (Tell me about yourself)

என்ைனக் ேகட்டால் இந்த ேகள்விக்கு பதிைல மனப்பாடம் ெசய்து ெகாள்ளலாம். ஆனால் ஒப்பிக்கற மாதிரி இருக்கக்கூடாது. ெபாறுைமயா நிதானமாக ெசால்வது மாதிரி இருக்க ேவண்டும்.

(நான் மனசுக்குள்ேள இைத 100 முைறயாவது ெசால்லி இருப்ேபன்). Tell me about youselfல் நான் ெசால்லியது இதுதான்:

என் ெபயர். கல்வி விவரம் (கல்லூரி விவரம் ேபாதும்) குடும்பம் (அப்பா, அம்மா, சேகாதர/சேகாதிரியின் இன்ைறய நிைல. அவர்கள் ேபர் எல்லாம் ெசால்ல ேதைவயில்ைல. படிக்கிறார்கள் என்றால் படிக்கிறார்கள்/ ேவைலக்கு ெசல்கிறார்கள் என்றால் என்ன ேவைல அவ்வளவுதான்) உங்கள் ெபாழுது ேபாக்கு (அதிகமாக ெசால்லாதீர்கள். உண்ைமைய ெசால்லவும். நான் ெசான்னது சைமயல்) உங்கள் பலம். அவர்கள் ேகட்டால் பலவ ீனத்ைத ெசால்லவும். பலவ ீனமும் ஒரு வைகயில் பலமாக இருக்குமாறு ெசால்லவும். நான் ெசான்னது, எனக்கு இரக்ககுணம் அதிகம், அதனால் மற்றவர்களுக்கு உதுவுகிேறன் ேபர்வழியாக என்ைனேய கஷ்டப்படுத்தி ெகாள்ேவன். ஆனால் அந்த பணி ெவற்றியைடந்த பிறகு மகிழ்ச்சியாகேவ உணர்கிேறன். முடிந்த அளவு 90-120 ெநாடிகளுக்குள் முடித்து ெகாள்ளவும். குைறந்த பட்சம் 20 முைறயாவது ெசால்லி பார்க்கவும். தன்னம்பிக்ைகயுடன் ேபசவும், தைலகனத்துடன் ேவண்டாம். சின்ன சின்ன டிப்ஸ்....

(20)

சாப்ட்ேவர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-8!!!

சின்ன சின்ன டிப்ஸ்: - எந்த கம்ெபனிக்கு ஆப்டிடுயுட் ெடஸ்ட் (Aptitude Test)க்கு ெசல்வெதன்றாலும் அதற்கு முன்பு அந்த கம்ெபனி பைழய ேகள்வித்தாள்கைள படித்துவிட்டு ெசல்லவும். (நான் சிண்டல் (syntel) எழுத ேபாகும்ேபாது பைழய ேகள்விகைள படித்துவிட்டு ேபானதால் எளிதாக ேதர்வாேனன். 50 ேகள்விகளில் 30 ேகள்விகள் பைழய ேகள்விகளில் இருந்ேத வந்தது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிைலயால் நான் அதில் ேசரவில்ைல).www.freshersworld.com ல் பைழய ேகள்வித்தாள்கள் இருக்கும். -முடிந்த வைர நண்பர்களுக்கு உதவவும். எந்த கம்ெபனியாவது வாக் இன் (Walk In) நடத்தினால், நண்பர்கள் அைனவருக்கும் ெசால்லவும். எங்ேக அவர்கள் நமக்கு ேபாட்டியாக வந்துவிடுவார்கேளா என்று நிைனக்கேவண்டாம். ெபாறாைம நம்ைம அழித்துவிடும். (நண்பர்களுக்கு நான் எந்த கம்ெபனிக்கு தயார் ெசய்யும் முைறைய ெசால்லி ெகாடுத்ேதேனா அந்த கம்ெபனியிேல ேசர்ந்ேதன்) -1 மணி ேநரத்தில் 50-60 ேகள்விகள் என்று ஆப்டிடுயுட் ெடஸ்ட் இருந்தால், முதலில் எல்லா ேகள்விகைளயும் வாசிக்கவும். ஏெனனில் ஒரு சில ேகள்விகளுக்கு படித்தவுடேன விைட ெதரிந்துவிடும் (Next day after Tuesday...1,3,5,?). அதனால் துவக்கத்தில் ெகாஞ்சம் கடினமாக இருக்கும் ேகள்விகளில் ேநரத்ைத

வ ீணாக்காதீர்கள்.

- இன்ேபாஸிஸ் தயார் ெசய்ய: முதலில் Quantitative Aptitude, அடுத்து shakuntala Devi's Puzzle to Puzzle You & More Puzzles, அடுத்து Puzzles and Teasers by George Summers, மிக முக்கியமானது பைழய ேகள்வித்தாள்கள்.

- சின்ன சின்ன ப்ேராகிராம் எந்த ேநரத்தில் ெகாடுத்தாலும் ேபாடுமாறு ெதரிந்து ைவத்துக் ெகாள்ளவும். (Fibanocci Series, Find Prime Number, find whether Palindrome, sum of a number...)

- வாக் இன் (Walk In) நடத்தினால் முடிந்தவைர சீக்கிரமாக ெசன்றுவிடவும். 10 மணி வாக் இன் என்றால் 7-8 மணிக்ேக ெசன்றாலும் தப்பில்ைல. அைழப்பின் ேபரில் (Call Letter) ெசன்றால் 30 நிமிடம் முன்னால் ெசன்றாேல ேபாதும்.

(21)

- ஒவ்ெவாரு கம்ெபனியாக ெசன்று ெரசுேம ெகாடுத்து ேநரத்ைத வ ீணாக்காதீர்கள். ெபரும்பாலான கம்ெபனிகள் இ-ெமயிலில் தான் ெரசுேம வாங்குகிறார்கள். அந்த ேநரத்தில் உட்கார்ந்து படியுங்கள். -மீண்டும் ெசால்கிேறன். ெதரியாதவர்களுக்கு ெசால்லி ெகாடுங்கள். நான் அைனத்ைதயும் படித்துவிட்டு ெசால்லி தருேவன் என்று ெசால்லாதீர்கள். இறுதியாக என் பள்ளியின் தாரக மந்திரமான "உைழப்ேப உயர்வு தரும்" (Labor Omnia Vincit) என்பைத மனதில் பதிய ைவத்துக் ெகாள்ளுங்கள். முடிந்தவைர நான் அனுபவித்தைத உங்களுடன் பகிர்ந்துவிட்ேடன். சீக்கிரம் வாங்க உங்களுக்காக நிைறய Treat காத்துக்கிட்டு இருக்கு....

(22)

ெமன்ெபாருள் பயிலகம்

ெமன்ெபாருள் துைறயில் புதிதாக ேவைல ேதடுபவர்கள் ஏதாவது ேகார்ஸ் ெசய்திருக்க ேவண்டுமா??? சர்டிபிேகஷன் எந்த அளவிற்கு உதவும் ேபான்ற ேகள்விகள் ேகட்டு எனக்கு ஒரு சிலர் இ-ெமயில் அனுப்பியிருந்தார்கள். அவர்களுக்கு என்னாலான பதில்கள். ெபாதுவாக புதிதாக ேவைல ேதடுபவர்கள் எதிலும் வல்லுனர்களாக (Specialisation) இருக்க ேவண்டிய அவசியமில்ைல. அதனால் நீங்கள் எதுவும் ேகார்ஸ் ெசய்திருக்க ேவண்டுெமன்ேறா, சர்டிபிேகஷன் ெசய்திருக்க ேவண்டுெமன்ேறா அவசியமில்ைல. எனக்கு கம்ப்யூட்டர் எதுவும் ெதரியாது. ெசால்லி தரவும் நண்பர்கள் இல்ைல. வ ீட்டில் கம்ப்யூட்டரும் இல்ைல. ஆனால் எப்படியாவது ெமன்ெபாருள் துைறயில் நுைழய ேவண்டும் என்றிருப்பவர்கள் ேகார்ஸ் ெசல்வது தவறில்ைல. ேமலும் காேலஜில் படிப்பவர்கள், சரியாக ெசால்லி தர ஆளில்ைல என்றிருப்பவர்கள், வகுப்பில் ஒருவர் அல்லது இரண்டு ேபர் ெசன்று மற்றவர்களுக்கு ெசால்லி தரலாம். எங்களுக்கு காேலஜில் C ெசால்லித்தந்த ஆசிரியர் வகுப்பில் ேகட்ட முதல் ேகள்வி, "Who is developed by C?". ஆனால் அவர் ேகட்க நிைனத்த ேகள்வி "Who developed C?" அவர் ெசால்லி ெகாடுத்து நாங்கள் புரிந்து ெகாண்டு.... ேவணாம் விடுங்க... அதனால் நாங்கள் Unix, C, C++ ேகார்ஸ் ெசன்ேறாம்... ஓரளவு நன்றாகேவ ெதரிந்து ெகாண்ேடாம்... அந்த ேகார்ஸ் ெசன்றது எனக்கு நம்பிக்ைகைய ெகாடுத்தது... நான் ெசால்வது இதுதான்... புதிதாக ேவைலத் ேதடுபவர்கள் அந்த துைறயில் வல்லுனர்களாக ேவண்டும் என்று அவசியமில்ைல. ஓரளவு நண்பர்கள் ஒன்றாக ேசர்ந்து படித்தாேல ேபாதும். சர்ட்டிபிேகஷன் ெபரிதாக உதவும் என்ற நம்பிக்ைகயும் எனக்கில்ைல. எைத படித்தாலும் நன்றாக புரிந்து படியுங்கள். மற்றவர்களுக்கு ெதரிந்தைத ெசால்லிக் ெகாடுங்கள். ெதரியாதைதக் ேகட்டு ெதரிந்து ெகாள்ளுங்கள். ேவறு வழியில்ைல என்றால் ேகார்ஸ் ெசல்வது தவறில்ைல. ேகார்ஸ் ெசன்றாலும் முடிந்தவைர நிைறய ெதரிந்து ெகாள்ளுங்கள்.

(23)

மதிப்ெபண் குைறவாக இருக்கிறது என்று கவைலப்படாதீர்கள். ெபரும்பாலான கம்ெபனிகள் உங்களுக்கு என்ன ெதரியும் என்பைதேய பார்க்கின்றன. மதிப்ெபண் முைறையக் ேகாண்டு ஒரு சில கம்ெபனிகேள ெதரிந்ெதடுக்கின்றன. அதுவும் முதல் சுற்றுக்ேக... இன்ைறய நிைலயில் அரியர் ேபப்பர்கள் இல்லாமல் இருந்தாேல ேபாதும்... நம்பிக்ைகேயாடு உைழயுங்கள்... இைறவன் உங்களுக்கு துைண புரிவான்..    

References

Related documents

This training seminar will ensure that you understand how to decide rationally what maintenance activities to outsource and what not, how to select the best

The Tenderer shall provide details of any on-line, pro-active support of the system available to the BEREC Office, including system monitoring and dealing with alarms and faults

[r]

The transformed function passes through the point (x,  10). Determine the value of x. a) Sketch the graphs of the functions on the same grid. c) State the range and the equation

While variations in landing pad contact corrosion, vehicle electrical contact size, and battery manufacturing did not significantly effect fast recharge performance in our tests,

The purpose of this review is to describe: how the literature has defined DLD in adolescents, and if this differs when the population being studied is incarcerated; what methods

In the era of Smart Data and the explosion of data volume of all kind, organizations seek for leveraging such data - being it patent information, research literature social media

As an increasing number of equipment vendors offer SFP-based modules for Gigabit Ethernet and Fiber Channel switches and network interface adapters, the LC connector has become the